/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'மீண்டும் மஞ்சப்பை' பயன்படுத்த அறிவுறுத்தல்
/
'மீண்டும் மஞ்சப்பை' பயன்படுத்த அறிவுறுத்தல்
ADDED : டிச 04, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் நாட்டாண்மை கொட்டாய் அரசு உயர்நிலைப் பள்ளியில், தேசிய பசுமை படை சார்பில், உலக மாசு கட்டுப்பாட்டு தினம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை வகித்தார்.
இதில், கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.
பிளாஸ்டிக் பையை தவிர்த்து அனைவரும் மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, பள்ளி வளாகத்தில், 300 செடிகளை கொண்டு உயிர்வேலிகள் அமைக்கப்பட்டது.

