/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
யோகிராம் சுரத்குமார் 107வது ஜெயந்தி திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
/
யோகிராம் சுரத்குமார் 107வது ஜெயந்தி திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
யோகிராம் சுரத்குமார் 107வது ஜெயந்தி திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
யோகிராம் சுரத்குமார் 107வது ஜெயந்தி திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
ADDED : டிச 04, 2025 07:08 AM

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டி.வி.எஸ்., நகர் ராம்ஜி காலனியில், பகவான் யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திர் உள்ளது. இங்கு அவரின், 107வது ஜெயந்தி விழா, நேற்று முன்தினம் நடந்தது. பஜனை மந்திர் தலைவர் ராம்ஜி ரத்னகுமார் தலைமை வகித்தார். அதிகாலை, 5:30 மணிக்கு, பகவான் யோகி ராம்சுரத்குமார் சிலைக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. காலை, 6:00 மணிக்கு, நாம ஜெபம் மற்றும் 6:30 மணிக்கு, வினோத் நாராயணசாமி குழுவினர் நாதஸ்வரம், தவில் மங்கள வாத்திய நிகழ்ச்சி நடந்தது. காலை, 9:00 மணிக்கு, ராம்ஜி பஜனை குழு தலைவர் குப்புசாமி குழுவினர் தலைமையில் பஜனையும், கும்மளாபுரம் துருவ நாராயணா குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடந்தது.
காலை, 11:30 மணிக்கு, நாசரேத் யோகி மந்திர் நிர்வாகி கோடி நாம ஜெபம் கவிஞர் விசிறி சங்கர் சொற்பொழிவு நடந்தது. அதில், யோகி மகான் பற்றிய அறிய ஆன்மிக கருத்துக்கள் எடுத்துரைக்கப் பட்டன. செல்லம்மாள் சங்கர் பக்தி கானம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஓசூர் பகவான் யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திர் பொதுச்
செயலாளர் அண்ணாமலை வீரப்பன், பொருளாளர்
உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

