/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பி.எப்., கணக்கு யூ.ஏ.என்., எண்ணை 'ஆக்டிவேட்' செய்ய அறிவுறுத்தல்
/
பி.எப்., கணக்கு யூ.ஏ.என்., எண்ணை 'ஆக்டிவேட்' செய்ய அறிவுறுத்தல்
பி.எப்., கணக்கு யூ.ஏ.என்., எண்ணை 'ஆக்டிவேட்' செய்ய அறிவுறுத்தல்
பி.எப்., கணக்கு யூ.ஏ.என்., எண்ணை 'ஆக்டிவேட்' செய்ய அறிவுறுத்தல்
ADDED : டிச 09, 2024 07:39 AM
கிருஷ்ணகிரி: பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதி சட்டத்தில், நிறுவனதாரர்கள், சந்தாதாரர்கள், தங்கள் யூ.ஏ.என்., எண்ணை, 'ஆக்டிவேட்' செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட பி.எப்., கமிஷனர் ஹிமான்ஷூ வெளியிட்டுள்ள அறிக்கை: யூ.ஏ.என்., எண் என்பது பி.எப்.,ல் உறுப்பினராக இருக்கக்கூடிய தொழிலாளர்களுக்கு, இ.பி.எப்.ஓ., அமைப்பால் கொடுக்கப்படும் ஒரு தனித்துவ எண். இது, தொழிலாளர்கள் தங்கள் பி.எப்., கணக்கை ஆன்லைன் மூலம் அணுக பயன்படுகிறது. இதன் மூலம், இருந்த இடத்திலிருந்தே பி.எப்., சம்பந்தமான அனைத்து சேவைகளையும் பெற முடியும். பிரதமர் மோடி, நடப்பாண்டு பட்ஜெட்டில் அறிவித்துள்ளபடி, வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்தவும், சந்தாதாரர்கள் தங்களுடைய பி.எப்., சேவையை எளிய முறையில் தடையில்லாமல் பெற்றிடவும், யு.ஏ.என்., எண்ணை நிறுவனதாரர்கள் மற்றும் சந்தாதாரர்கள் வரும், 15க்குள், 'ஆக்டிவேட்' செய்து சேவைகளை பெறலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.