/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஏரிகள் துார்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
/
ஏரிகள் துார்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ஏரிகள் துார்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ஏரிகள் துார்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 12, 2025 01:47 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நீர் மேலாண்மை (ஜல் சக்தி அபியான்) குறித்து அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் இயக்குனர் சிவபிரசாத் தலைமை வகித்து பேசுகையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஜல் சக்தி நீர் மேலாண்மை திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏரிகள் துார்வாரும் பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். மேலும், நீர் மேலாண்மை திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு, வீடுகளில் கழிவுநீர் தொட்டி, குறித்து மேற்கொள்ளப்பட்ட பணிகள் விபரங்களை ஜியோ டெக் இணைதளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து அவர் தலைமையிலான மத்திய குழுவினர், சோக்காடி பஞ்., போட்டுக்குழி கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் மேற்கொள்ளப்பட்டு வரும், 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கொண்டேப்பள்ளியில், 5.60 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏரி துார்வாரும் பணிகளை ஆய்வு செய்தனர்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கூடுதல் கலெக்டர் (பயிற்சி) க்ரிதி காம்னா, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.