/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
துவரையில் இரு மடங்கு மகசூல் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
/
துவரையில் இரு மடங்கு மகசூல் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
துவரையில் இரு மடங்கு மகசூல் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
துவரையில் இரு மடங்கு மகசூல் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
ADDED : நவ 01, 2024 01:15 AM
துவரையில் இரு மடங்கு மகசூல்
விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
கிருஷ்ணகிரி, நவ. 1-
துவரை உற்பத்தியில் இருமடங்கு மகசூல் பெற, 2 சதவீதம் டி.ஏ.பி., கரைசலை தெளிக்க, கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்தாண்டு, 20,000 ஹெக்டேர் பரப்பில், துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பூக்கும் தருவாயில் உள்ளதால், 2 சதவீதம் டி.ஏ.பி., கரைசலை தெளித்து இருமடங்கு உற்பத்தியை பெருக்கலாம். டி.ஏ.பி., கரைசல் லிட்டருக்கு, 20 கிராம் அல்லது யூரியா லிட்டருக்கு, 20 கிராம், பூக்கும் தருணத்தில் இலை தெளிப்பாக தெளிக்க வேண்டும். மேலும், 15 நாட்கள் கழித்து, மீண்டும் ஒரு முறை இலை தெளிப்பான தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதன் மூலம், பூ உதிர்வதை தடுக்கலாம். அதிக காய் பிடிப்பதை ஊக்குவிப்பதோடு, மகசூலையும் அதிகரித்து, மும்மடங்கு வருமானத்தை ஈட்டி தருகிறது. எனவே, துவரை பயிரிட்டுள்ள விவசாயிகள் அனைவரும், 2 சதவீதம் டி.ஏ.பி., கரைசலை பயன்படுத்தி, அதிக மகசூலை பெறலாம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.