/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்
/
இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்
ADDED : மார் 01, 2024 02:13 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
சி.இ.ஓ., அலுவலகம் முன்பு, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்
இயக்கம் சார்பில், தி.மு.க., அரசு தேர்தல்கால வாக்குறுதியை
நிறைவேற்றக்கோரி கடந்த, 26 முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு
வந்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று உண்ணாவிரத போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்து
பேசியதாவது: தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி,
20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம்
வழங்கக்கோரி, 3 நபர் ஊதியக் குழு அமைத்து அரசாணை வெளியிட்டனர். 3
நபர்கள் குழுவின் அறிக்கையை விரைவாக பெற்று, 13 ஆண்டுகால இடைநிலை
ஆசிரியர்களின் வேதனையை களைய வேண்டும். 2009க்கு பின் நியமிக்கப்பட்ட
இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம், 8,370 ரூபாய் என்றும்,
பின்னர் நியமிக்கப்பட்டவர்களுக்கு, 5,200 ரூபாய் என்றும், சம
வேலைக்கு, சம ஊதியம் என்பதை நிராகரித்து, 2 விதமான ஊதியம்
நிர்ணயிக்கப்பட்டது. எனவே, தி.மு.க., தேர்தல் அறிக்கையில்
கூறியபடி, இடைநிலை ஆசிரியர்களுக்கு, 'சம வேலைக்கு சம ஊதியம்' என
அளித்த வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இதில், மாவட்ட தலைவர் கணேஷ், பொருளாளர் முனியசாமி உள்பட, 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

