/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பா.ஜ., பக்கம் சாய்கிறாரா பாலகிருஷ்ணா ரெட்டி? கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவும் தகவல்
/
பா.ஜ., பக்கம் சாய்கிறாரா பாலகிருஷ்ணா ரெட்டி? கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவும் தகவல்
பா.ஜ., பக்கம் சாய்கிறாரா பாலகிருஷ்ணா ரெட்டி? கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவும் தகவல்
பா.ஜ., பக்கம் சாய்கிறாரா பாலகிருஷ்ணா ரெட்டி? கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவும் தகவல்
ADDED : ஜூலை 04, 2024 05:57 AM
ஓசூர்: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்-ணாரெட்டி, பா.ஜ., கட்சிக்கு தாவ இருப்பதாக, தீயாய் தகவல் பரவி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஜீமங்க-லத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணாரெட்டி. ரியல் எஸ்டேட், செங்கல்சூளை தொழில் செய்து வந்த இவர், 2001ல், அ.தி.மு.க., உறுப்பினராகவும், 2006ல் எம்.ஜி.ஆர்., இளைஞரணி இணை செயலாளரா-கவும் பதவி பெற்றார். பின், 2010 ல், ஓசூர், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளராகி, 2011 ல், ஓசூர் நகராட்சி தலைவராக வெற்றி பெற்றார்.
அதன் பின், 2016 ல் ஓசூர் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில், கால்-நடை பராமரிப்புத்துறை அமைச்சரானார். முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற பின், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.
கடந்த, 1998ல், கள்ளச்சாராயத்திற்கு எதிராக, ஓசூர் அருகே பாகலுாரில் நடந்த போராட்டத்தில் போலீசார் ஜீப் எரிக்கப்பட்டது. இதில், 108 பேர் மீது வழக்கு பதியப்பட்டதில், பாலகிருஷ்ணாரெட்டி, 71 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.இந்த வழக்கு ஓசூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்-தது. பின், எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த, 2019 ஜன., மாதம் வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாலகிருஷ்ணாரெட்டிக்கு, 3 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதித்தது. இதனால் அவரது எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர் பதவி பறிபோனது.
அவர் மேல் முறையீடு செய்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அவருக்கு விதித்த, 3 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்தது. அ.தி.மு.க.,வின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளராக உள்ள அவர், கடந்த, 2019 ஓசூர் இடைத்தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில், தன் மனைவி ஜோதிக்கு, அ.தி.மு.க.,வில், 'சீட்' வாங்கி கொடுத்தும், தி.மு.க.,விடம் தோற்றார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் முனுசா-மியின் ஆதரவாளரான, அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் ஜெயப்பிரகாஷ், சமீ-பத்தில் நடந்த எம்.பி., தேர்தலில் வேட்பாளராக நின்று தோல்வி யடைந்தார். அவருக்குத்தான், வரும் சட்டசபை தேர்தலில், ஓசூர் தொகுதியில், 'சீட்' வழங்கப்படும் என, முனு-சாமி ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர். பாலகி-ருஷ்ணாரெட்டி தற்போது சிறை தண்டனையில் இருந்து தப்பி உள்ளதால், அவர் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது.
முனுசாமியின் ஆதரவு, ஜெயப்பிரகாஷிற்கு உள்-ளதால், அவரது கை ஓங்குவதாக ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில், பா.ஜ., கட்சிக்கு சென்று விடலாமா என, பாலகிருஷ்ணாரெட்டி, தன் ஆதரவாளர்க-ளுடன் பேசி வருவதாக மாவட்டம் முழுவதும் கட்-சியினரிடம் தகவல் பரவி வருகிறது.
இது குறித்து, பாலகிருஷ்ணாரெட்டியிடம் கேட்ட-போது, ''ஓசூரில், அ.தி.மு.க.,வே இல்லை என கூறிய காலக்கட்டத்தில், கட்சிக்கு வந்தேன். ஒன்-றிய செயலாளர், நகராட்சி தலைவர், மாவட்ட செயலாளர், அமைச்சர் என பல பதவிகளை, அ.தி.மு.க.,வில் தான் பெற்றேன். அப்படிப்பட்ட கட்சியை விட்டு, விட்டு எப்போதும் செல்ல மாட்டேன்,'' என்றார்.