/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பி.எம்.சி., கல்லுாரி மாணவர்களுக்கு தேசிய தொழிற்சான்றிதழ் வழங்கல்
/
பி.எம்.சி., கல்லுாரி மாணவர்களுக்கு தேசிய தொழிற்சான்றிதழ் வழங்கல்
பி.எம்.சி., கல்லுாரி மாணவர்களுக்கு தேசிய தொழிற்சான்றிதழ் வழங்கல்
பி.எம்.சி., கல்லுாரி மாணவர்களுக்கு தேசிய தொழிற்சான்றிதழ் வழங்கல்
ADDED : அக் 29, 2024 01:00 AM
பி.எம்.சி., கல்லுாரி மாணவர்களுக்கு
தேசிய தொழிற்சான்றிதழ் வழங்கல்
ஓசூர், அக். 29-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கோனேரிப்பள்ளியில் இயங்கும் பி.எம்.சி., டெக் ஐ.டி.ஐ.,யில், ஆக., 2024ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, தேசிய தொழிற்சான்றிதழ் வழங்கும் விழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. பி.எம்.சி., டெக் கல்வி நிறுவனங்கள் தலைவர் குமார் தலைமை வகித்து பேசுகையில், மாணவர்கள், வருங்காலத்தில் சுயமாக தொழில் துவங்கி, தொழில்முனைவோராக, கேட்டுக்கொண்டார்.
இயக்குனர் சுதாகரன், முதல்வர் பாபு முன்னிலை வகித்தனர். தொழிற்பள்ளி முதல்வர் நாகராஜன் வரவேற்றார். பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணியம், எக்ஸிகியூட்டி டீன் ரவிச்சந்திரன், திட்ட மேலாளர் முருகன், மெக்கானிக்கல் துறை தலைவர் முத்துக்குமார் பேசினர்.
அசோக் லேலண்ட் உதவி மேலாளர் சங்கர், மாணவர்களுக்கு தேசிய தொழிற்சான்றிதழ் வழங்கி, மாணவர்கள் தங்களது திறமையை வளர்த்துக் கொண்டு, வாழ்வில் தொழில்முனைவோராக வர, வாழ்த்தினார்.
ஏற்பாடுகளை, நந்திகேஷ், அப்சர்ஜான், சரவணன் செய்திருந்தனர். வேலைவாய்ப்பு அலுவலர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.