/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கைலாசநாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
/
கைலாசநாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 09, 2025 03:04 AM
ஓசூர்: ஓசூர், டி.வி.எஸ்., நகரில், தளி செல்லும் சாலையோரமுள்ள எல்லம்மா தேவி மற்றும் கைலாசநாதேஸ்வரர் கோவில் கும்பாபி-ஷேக விழா நேற்று முன்தினம் துவங்கியது.
நேற்று காலை, 10:00 மணிக்கு, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவரான கோவில் அறங்காவலர் தலைவர் சென்னீரப்பா ஆகியோர், எல்லம்மா தேவி மற்றும் கைலாசநாதேஸ்வரர் கோவி-லுக்கு புனித நீர் ஊற்றி, தீபாராதனை காண்பித்து கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். முன்னதாக, பெண்கள் புனித நீரை தலையில் சுமந்து, மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். ஹிந்து சமய அறநிலையத்துறை ஓசூர் சரக ஆய்வாளர் சக்தி, கோவில் அறங்காவலர் உறுப்பினர்கள் சரோஜா, நாகராஜ் உட்பட ஏராள-மான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.*மத்துார் அடுத்த, கண்ணன்டஹள்ளி பஞ்.,, ஜெ. ஆர்.,நகரி-லுள்ள அலர்மேல் மங்கை தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் ஆலய கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் சுற்று வட்டா-ரத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.