ADDED : ஜூலை 16, 2025 01:39 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம் நாச்சிகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஓசூர் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ஓசூர் காமராஜ் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கெலமங்கலம் ஒன்றியம், தொட்டபேளூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஊத்தங்கரை அருகே ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில், காமராஜர் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி தினமாக நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
* போச்சம்பள்ளி, மத்துாரிலுள்ள காமராஜர் சிலைக்கு, கிருஷ்ணகிரி, காங்., எம்.பி., கோபிநாத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
* காவேரிப்பட்டணம் நகர, வட்டார காங்., கட்சி சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா, நகர தலைவர் ஸ்ரீராம் தலைமையில் நடந்தது. ஊத்தங்கரை ரவுண்டானாவில், காங்., சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா வட்டார தலைவர் திருமால் தலைமையில் நடந்தது. காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினர்.