/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கர்நாடகா மதுபானம் வைத்திருந்தவர் கைது
/
கர்நாடகா மதுபானம் வைத்திருந்தவர் கைது
ADDED : செப் 07, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், எஸ்.ஐ., நாகராஜ் மற்றும் போலீசார், தேன்கனிக்கோட்டையில் இருந்து ஓசூர் செல்லும் சாலையில், நேற்று அதிகாலை ரோந்து சென்றனர்.
அப்போது, பேளூர் கேட் அருகே டி.வி.எஸ்., ஜூபிட்டர் ஸ்கூட்டரில் வந்த நபர், கர்நாடக மதுபானங்களை கடத்தி வந்து, ஏ.ஒன்னுப்பள்ளியை சேர்ந்த சுமன், 32, என்பவரிடம் ஒப்படைத்து விட்டு தப்பி சென்றார். இதையறிந்த போலீசார், சுமனை அவரது வீட்டின் அருகே கைது செய்து, 160 பாக்கெட் கர்நாடக மதுபானத்தை பறிமுதல் செய்தனர்.