UPDATED : நவ 07, 2026 04:36 AM
ADDED : நவ 07, 2026 03:50 AM

ஓசூர்; சேலம் வாலிபர்களுக்கு விற்பனை செய்ய, மெத்த பெட்டமைன் கடத்தி சென்ற கர்நாடக மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து, 80 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார், தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவிலிருந்து மதுரை நோக்கி சென்ற எம்.எஸ்.எஸ்., என்ற தனியார் ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பயணித்த வாலிபர் ஒருவரிடம், 13 சிறிய
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட, மெத்தபெட்டமைன் எனப்படும், 80 கிராம் போதை பவுடர் இருந்தது.
அவரை பிடித்து விசாரித்த போது, கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம், முல்பாகல் அருகே அகாரா பகுதியை சேர்ந்த அப்சல்பாஷா, 33, என்பதும், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், தன் நண்பர் மூலமாக பழக்கமான நீக்ரோ என அழைக்கப்படும் ஒருவரிடம் இருந்து, மெத்தபெட்டமைன் போதை பவுடரை வாங்கி கொண்டு, கியூ.ஆர்., கோடு மூலமாக பணம் அனுப்பியது தெரிந்தது.
மேலும், மெத்தபெட்டமைனை சேலத்திற்கு எடுத்து சென்று, அங்கு இரு நாட்கள் தங்கியிருந்து, வாலிபர்
களுக்கு விற்பனை செய்து, கியூ.ஆர்., கோடு மூலமாக பணம் பெற முடிவு செய்திருந்ததாக, அப்சல் பாஷா போலீசாரிடம் தெரிவித்தார். அவரை கைது செய்த போலீசார், 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 80 கிராம் மெத்தபெட்டமைன் பவுடரை பறிமுதல் செய்தனர்.
