/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேம்பி அழுதபடி விடைபெற்ற கட்டிகானப்பள்ளி பஞ்., தலைவர்
/
தேம்பி அழுதபடி விடைபெற்ற கட்டிகானப்பள்ளி பஞ்., தலைவர்
தேம்பி அழுதபடி விடைபெற்ற கட்டிகானப்பள்ளி பஞ்., தலைவர்
தேம்பி அழுதபடி விடைபெற்ற கட்டிகானப்பள்ளி பஞ்., தலைவர்
ADDED : ஜன 07, 2025 12:38 AM

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி நகராட்சியை ஒட்டியுள்ள கட்டிகானப்பள்ளி பஞ்., தற்போது நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது. தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நேற்று முன்தினத்தோடு முடிவடைந்தது.
கட்டிகானப்பள்ளி பஞ்., தலைவர் காயத்ரிதேவியின் பதவிக்காலம் நிறைவு பெற்றதால், துாய்மை பணியாளர்கள், பஞ்., ஊழியர்கள், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி ஆப்பரேட்டர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட, 100 பேருக்கு சேலை, லுங்கி, போர்வை, குடை, டிராவல் பேக்குடன், 1,000 ரூபாய் மதிப்புள்ள பொங்கல் பரிசை நேற்று வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், “இதுவரை ஒத்துழைப்பு அளித்த அனைத்து பணியாளர்களுக்கும் நன்றி,” எனக்கூறி தேம்பி, தேம்பி அழுதார்.
அதை பார்த்த துாய்மை பணியாளர்களும் அவருடன் சேர்ந்து அழுதனர்.
அவர்களிடம் காயத்ரிதேவி, ''பஞ்., தலைவர் பதவி நிறைவடைந்தாலும் நீங்கள் அனைவரும் என்னை எப்போதும் போல சந்தித்து, உதவிகள் கேட்கலாம்,'' என்றார்.
தொடர்ந்து தேவசமுத்திரம் அரசு துவக்கப்பள்ளி மாணவர்கள், 30 பேருக்கு போர்வை மற்றும் டிபன் பாக்ஸ் வழங்கினார்.

