/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை
ADDED : அக் 23, 2024 07:32 AM
கிருஷ்ணகிரி: கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் மழையால், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த மழையால், கடந்த, 16ல் கே.ஆர்.பி., அணைக்கு, 3,428 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. பின் மழையின்றி, 19ல், 1,082 கன அடியாக நீர்வரத்து குறைந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் மழையால் தற்போது அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் கே.ஆர்.பி., அணைக்கு, 2,380 கன அடியாக நீர்வரத்து இருந்த நிலையில், ஓசூரில் பெய்து வரும் மழையால் நேற்று நள்ளிரவு நீர்வரத்து, 4,042 கன அடியாக அதிகரித்தது.
இதனால் பிரதான மூன்று ஷட்டர்கள் மூலம் அணையில் இருந்து, 4,112 கன அடிநீர் திறக்கப்பட்டதால், தரைப்பாலத்தை மூழ்கி தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில், நேற்று மதியம் கே.ஆர்.பி., அணைக்கு, 2,052 கன அடியாக நீர்வரத்து குறைந்ததால், அணைக்கு வந்த கொண்டிருந்த தண்ணீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டது.
இதனால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுார் வரை, மூன்று மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்வதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று காலை, 50.20 அடியாக நீர்மட்டம் இருந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தளி, 20 மி.மீ., சூளகிரி, 13, கெலவரப்பள்ளி அணை, 12, அஞ்செட்டி, 10.1, ஓசூர், 5.7, தேன்கனிக்கோட்டை, 1.1 என மொத்தம், 61.8 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. கிருஷ்ணகிரியில் நேற்று மதியம், 1:00 மணிக்கு மழை பெய்தது.