/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாநில செஸ் போட்டிக்கு தகுதி அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு
/
மாநில செஸ் போட்டிக்கு தகுதி அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு
மாநில செஸ் போட்டிக்கு தகுதி அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு
மாநில செஸ் போட்டிக்கு தகுதி அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு
ADDED : அக் 11, 2024 01:01 AM
மாநில செஸ் போட்டிக்கு தகுதி
அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு
கிருஷ்ணகிரி, அக். 11-
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், ராமாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 6ம் வகுப்பு படிக்கும் திரிஷித் என்ற மாணவன், ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளியில் நடந்த, கிருஷ்ணகிரி வருவாய் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில், 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில், மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இதையடுத்து, மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற அம்மாணவருக்கு, கிருஷ்ணகிரி சி.இ.ஓ., (பொ) முனிராஜ், பதக்கம் அணிவித்து பாராட்டினார். பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வெங்கடேசன், உடற்கல்வி ஆசிரியை சங்கீதா, பள்ளி உதவி ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் முருகன், செல்லப்பா ஆகியோர் உடனிருந்தனர்.