/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 17, 2025 01:21 AM
பாலக்கோடு,தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கொட்டாப்பள்ளம் கிராமத்திலுள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
விழா கடந்த, 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை யாகசாலையிலிருந்து, புனித தீர்த்தம் பிரகார வலம் கொண்டு செல்லப்பட்டு, பின் கோவில் கோபுர உச்சிக்கு கொண்டு சென்று கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது.பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
இதைடுத்து, பெரியாண்டிச்சி அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரிப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்
களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

