/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குறுவள மைய கலைத்திருவிழா போட்டிகள்
/
குறுவள மைய கலைத்திருவிழா போட்டிகள்
ADDED : ஆக 30, 2025 01:11 AM
ஓசூர், ஓசூர் ஒன்றியம், பேடரப்பள்ளியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 882 மாணவர்கள் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளிக்கல்வி துறை உத்தரவுப்படி, ஆண்டுதோறும் கலை திருவிழா போட்டிகள் நடப்பது வழக்கம். நடப்பாண்டில், ஒன்று முதல், 5ம் வகுப்பு வரை பள்ளி அளவில் முதலிடம் பிடித்த, 13 பள்ளிகளின் மாணவர்களுக்கு குறுவள மைய அளவில் ஜூஜூவாடி அரசு துவக்கப்பள்ளியில், ஆக.,26 மற்றும், 28ல் போட்டிகள் நடந்தன.
வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் காயத்ரி தலைமை வகித்தார். பேடரப்பள்ளி அரசுப்பள்ளி சார்பில், 18 நிகழ்ச்சிகளில் முதலிடம் பிடித்த, 21 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், குறுவள மைய அளவில், 7 நிகழ்ச்சிகளில் பேடரப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தை தட்டிச் சென்றனர். 8 நிகழ்ச்சிகளில் இரண்டாம் இடம் மற்றும், 2 நிகழ்ச்சிகளில் மூன்றாம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பேரப்பள்ளி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகேஷ் நேற்று பரிசு வழங்கி பாராட்டினார்.