நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்-பள்ளி அருகே அரசனட்டி பாரதி நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரவணன், 60. கூலித்தொழி-லாளி; நேற்று முன்தினம் நண்பகல், 12:00 மணிக்கு, உளிவீரனப்பள்ளியில் உள்ள நஞ்சுண்-டாரெட்டி என்பவரது வீட்டின் முதல் தளத்தில் கட்-டுமான பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, முதல் தளத்திலிருந்து, தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்ட சக தொழிலாளர்கள், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார். மத்திகிரி இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராசன் விசாரிக்கிறார்.

