/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சிக்கு இடம் தேர்வு: பூமி பூஜை செய்து துவக்கம்

ADDED : மே 24, 2025 01:21 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மா விவசாயிகளை ஊக்குவிக்க ஆண்டு தோறும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், அரசு ஆடவர் கலைக்கல்லுாரி மைதானம் மற்றும் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகிலுள்ள தனியார் திடல் ஆகிய இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இதில் டோல்கேட் அருகிலுள்ள திடலில், மாங்கனி கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டு நேற்று பூமிபூஜை நடந்தது.
மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பணிகளை துவக்கி வைத்தார். தி.மு.க., எம்.எல்.ஏ., மதியழகன், வேளாண்மை துறை இணை இயக்குனர் பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரியில், 31வது அகில இந்திய கண்காட்சிக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளன. நாளொன்றுக்கு, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருவர் என்பதால், தனி பாதைகள் அமைக்கப்படவுள்ளன.
போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், பொழுதுபோக்கு அம்சங்களுடன் மாங்கனி கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஜூன் முதல் வாரத்தில் துவங்கும் கண்காட்சியை, 25 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.