ADDED : மார் 12, 2024 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் அம்மன் மயான கொள்ளைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது.
இதையடுத்து நேற்று மாலை, 7:30 மணிக்கு அம்மனுக்கு விடாய் உற்சவமும், ஊஞ்சலில் அம்மனை வைத்து தாலாட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வீட்டிலிருந்து கூழ் கொண்டு வந்து அம்மனுக்கு படைத்தனர். தொடர்ந்து அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடல் பாடினர். பின்னர் பக்தர்கள் தேங்காயில் கற்பூரம் ஏற்றி, அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. இன்று (மார்ச் 12) மாலை, 6:30 மணிக்கு அக்னி குண்ட தீமிதி விழாவும், நாளை பகல், 11:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணமும் நடக்க உள்ளன.

