/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மதுரை நெய் வியாபாரி ஓசூர் அருகே கொலை
/
மதுரை நெய் வியாபாரி ஓசூர் அருகே கொலை
ADDED : நவ 22, 2024 01:38 AM
மதுரை நெய் வியாபாரி
ஓசூர் அருகே கொலை
ஓசூர், நவ. 22-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலுள்ள, ரிங் ரோட்டில் பள்ளூர் உள்ளது. இது கர்நாடக மாநில எல்லை பகுதி. இங்கு கர்நாடக மாநில மதுக்கடை, பார் உள்ளது. இதன் அருகில் சாலையோரம் அரை நிர்வாணமாக ஆண் ஒருவர் நேற்று சடலமாக கிடந்தார். கர்நாடக மாநில அத்திப்பள்ளி போலீசார் சென்று விசாரித்தனர்.
கொலை செய்யப்பட்டு கிடந்த நபரிடம் இருந்த அடையாள அட்டையை பார்த்தபோது, மதுரையை சேர்ந்த அழகுராஜா, 30, என தெரிந்தது. உடல் கிடந்த இடத்தின் அருகில், பெண்கள் அணியும் துப்பட்டா, மதுபாட்டில், ஊறுகாய் பாக்கெட், டின்னில், 15 கிலோ நெய், அவரது பைக் இருந்தது. தமிழக பதிவெண் கொண்ட பைக்கை பறிமுதல் செய்தனர். ஓசூர், அத்திப்பள்ளி சுற்று வட்டார பகுதியில், அழகுராஜா நெய் விற்பனை செய்து வந்துள்ளார். அழகுராஜா தலையின் பின்புறம் மற்றும் உடலின் பல இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தன.