ADDED : நவ 21, 2026 05:06 AM
அ நிறம் | அளவு
ஓசூர்; கர்நாடகா மாநிலம், சர்ஜாபூர் பகுதியை சேர்ந்த பிரபாகர் மகள் கீதா, 23. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி அருகே கொத்த ஜூகூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.
கடந்த, 18ம் தேதி மதியம், 3:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. பிறப்பிலிருந்தே மனநலம் பாதிக்கப்பட்டிருந்த கீதா எங்கு சென்றார் என்பது தெரியாததால், அவரது அண்ணன் மங்குலு, 34, மத்திகிரி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான கீதாவை தேடி வருகின்றனர்.
