/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மனவளக்கலை மன்றத்தின் மனைவி நல வேட்பு விழா
/
மனவளக்கலை மன்றத்தின் மனைவி நல வேட்பு விழா
ADDED : செப் 29, 2025 07:27 AM
கிருஷ்ணகிரி: மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், மனைவி நல வேட்பு விழா நடந்தது.
கிருஷ்ணகிரி, மனவளக்கலை மன்ற அறக்கட்-டளைகள் மற்றும் யோகா ஆன்மிக கல்வி தவ மையங்கள் சார்பில், குடும்ப உறவின் உன்னதத்-தையும், கணவன், மனைவி உறவின் புனிதத்-தையும் போற்றிடும், மனைவி நல வேட்பு விழா நேற்று நடந்தது. பேராசிரியர் ராஜம், துணை பேராசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் இறை வணக்கமும், துணை பேராசிரியர்கள் பரிமளா, பத்மா ஆகியோர் குரு வணக்கமும், பேராசிரியர் மகாலிங்கம், தவம் ஆகிய நிகழ்வை நடத்தினர். துணை பேராசிரியர் சண்முகம் வரவேற்றார்.
இதில், உடல் நலம் பேணுதல், மனைவி நல வேட்பு, காந்த பரிமாற்ற தவம் குறித்து, தர்மபுரி மனவளக்கலை மன்ற பேராசிரியர் சக்திவேல் விளக்கம் அளித்தார். நிகழ்வில், 70க்கும் மேற்பட்ட கணவன் - மனைவி, ஒருவருக்கொ-ருவர் கங்கனம் கட்டி, மாலை மாற்றி, கணவன், மனைவியின் தலையில் பூச்சூடி, வாழ்க்கை இனிதாக அமைய, மனைவி தன் கணவருக்கு பழங்களை கொடுத்து, ஒருவருக்கொருவர் கண்-களை நேருக்கு நேர் பார்த்து, ஜீவகாந்த பரி-மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. அறங்காவலர் இளங்கோவன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை மம்தா தொகுத்து வழங்கினார்.