ADDED : ஜூலை 18, 2026 06:19 AM
அ நிறம் | அளவு
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பேரண்-டப்பள்ளி அருகே தின்னுாரை சேர்ந்தவர் ஆனந்த-குமார், 27, டிரைவர்; ஆலுார் கிராமத்தை சேர்ந்-தவர் ஹரிஷ், 27. டூவீலர் மெக்கானிக்; இவர்கள் இருவரும் கடந்த, 15 நாட்களுக்கு முன், டாஸ்மாக் கடை அருகே மது
அருந்தினர்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்-டது. இந்த முன்விரோதம் காரணமாக கடந்த, 15ம் தேதி இரவு, 7:00 மணிக்கு கதிரேப்பள்ளி பகு-தியில் ஆனந்தகுமார் சென்ற போது, ஹரிஷ் அவரை தகாத வார்த்தையால் திட்டி, இரும்பு கம்-பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் தலை, இடது தோள்பட்டை, கால் பகு-தியில் காயமடைந்த ஆனந்தகுமார், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவ-ரது புகார்படி, ஹரி ைஷ நேற்று முன்தினம் ஹட்கோ போலீசார் கைது செய்தனர்.
