/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
ADDED : டிச 18, 2024 01:39 AM
கிருஷ்ணகிரி, டிச. 18-
கிருஷ்ணகிரி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் வட்டார வள மையம் சார்பில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நேற்று நடந்தது. உதவி திட்ட அலுவலர் வடிவேலு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். முகாமில், வட்டார வள மைய மேற்பார்வையாளர் அசோக், தலைமை ஆசிரியர் மகேந்திரன், வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்து அடையாள அட்டையை வழங்கினர்.
முகாமில், கண், காது, தொண்டை மருத்துவர், மன நல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், எலும்பு முறிவு மருத்துவர் ஆகியோர் மாணவ, மாணவியரை பரிசோதித்து, 35 பேருக்கு அடையாள அட்டை, 23 பேரை நலவாரிய உறுப்பினராக சேர்க்கை, 4 பேருக்கு சக்கர நாற்காலி, 2 பேருக்கு, 3 சக்கர வாகனம், 3 பேருக்கு சி.பி.சேர், 3 பேருக்கு காதொலி கருவி, 10 பேருக்கு பஸ் பாஸ் வழங்கி, 5 பேருக்கு அறுவை சிகிச்சை பெற பரிந்துரை
செய்தனர்.
ஏற்பாடுகளை, ஆசிரியர் பயிற்றுனர்கள் தமிழ் தென்றல், தமிழரசு, அம்பிகா, நளினா, திவ்யா, அனுஷா, ரமணி, மாற்றுத்திறன் மணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் அருண்குமார், ஜித்தன், சத்யா ஆகியோர் செய்திருந்தனர்.