/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மினி ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி ஏலம் துவக்கம்
/
மினி ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி ஏலம் துவக்கம்
ADDED : அக் 28, 2025 01:16 AM
சூளகிரி, சூளகிரி அருகே, செம்பரசனப்பள்ளி கிராமத்தில், வரும் பிப்., மாதம், 2ம் ஆண்டு மினி ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் நடக்க உள்ளன. இதற்காக வீரர்கள் ஏலம், சூளகிரி தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. வேப்பனஹள்ளி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., முனுசாமி துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள், 300 பேர் ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டில்லி கேபிட்டல்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசஸ் ஹைதராபாத் என மொத்தம், 8 அணிகளின், உள்ளூர் உரிமையாளர்கள் வீரர்களை ஏலம் எடுத்தனர்.
ஒவ்வொரு அணியின் உரிமையாளருக்கும், 30,000 புள்ளிகள் வழங்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் அந்த புள்ளிகளுக்குள், தங்களுக்கு வேண்டிய, 15 வீரர்களை ஏலம் எடுத்தனர். முன்னதாக பேசிய முனுசாமி எம்.எல்.ஏ., வேப்பனஹள்ளி தொகுதியில் அடுத்தாண்டு கிரிக்கெட் போட்டிகள் நடத்த, அனைத்து வசதிகளுடன் கூடிய மைதானம் அமைத்து தரப்படும் என உறுதியளித்தார்.

