/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மினி பஸ் போக்குவரத்து 4 வழித்தடத்தில் துவக்கம்
/
மினி பஸ் போக்குவரத்து 4 வழித்தடத்தில் துவக்கம்
ADDED : ஜூலை 25, 2025 12:52 AM
போச்சம்பள்ளி,கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலிருந்து, 4 வழித்தடத்தில், மினி பஸ் போக்குவரத்தை பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் நேற்று தொடங்கி வைத்தார். இதில் போச்சம்
பள்ளியிலிருந்து, கண்ணன்டஹள்ளி வழியாக பர்கூருக்கும், போச்சம்பள்ளியிலிருந்து சிப்காட் வழியாக கும்மனுாருக்கும், போச்சம்பள்ளியிலிருந்து சிப்காட், சூளகரை வழியாக கல்லாவிக்கும், அதேபோல் போச்சம்பள்ளியிலிருந்து இருமத்துாருக்கும் என, 4 வழித்தடங்களில் மினி பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இந்த வழித்தடங்களில் போதிய பஸ் வசதி இல்லாமல் இருந்ததால், மக்கள் அவதிப்பட்டு வந்தனர். தற்போது புதிய பஸ் போக்குவரத்து மக்களின் அன்றாட தேவைகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என மக்கள் தெரிவித்தனர்.