ADDED : நவ 14, 2026 04:36 AM
அ நிறம் | அளவு
சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு, நேற்று வருகை தந்த பொறுப்பு அமைச்சர் கீர்த்தனா, சூளகிரி சிப்காட் தொழில் பூங்கா திட்ட அலுவலர் அலுவலகத்தில் ஆய்வு செய்து, தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து, அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, ஓசூர் பாகலுார் சாலையிலுள்ள எல்காட் வளாகத்தில் இயங்கி வரும், ஏ.ஐ., தொழில்நுட்ப நிறுவனமான குளோபல் வி கனெக்ட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு, பணியாளர்களிடம் உரையாடினார்.ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், எஸ்.பி., அனிதா, மாவட்ட வருவாய் அலுவலர் மஞ்சுளா, ஓசூர் மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம், வேப்பனஹள்ளி, தி.மு.க., - எம்.எல்.ஏ., சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
