/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பஞ்., வாரியாக குறை கேட்ட எம்.எல்.ஏ., மாநகராட்சி, டவுன் பஞ்.,ல் இணைய எதிர்ப்பு

ADDED : பிப் 01, 2025 06:58 AM
ஓசூர்: ஓசூர் அருகே, பஞ்., வாரியாக குறைகேட்ட எம்.எல்.ஏ.,விடம், மாநகராட்சி மற்றும் டவுன் பஞ்.,த்துடன் இணைய எதிர்ப்பு தெரி-வித்து மக்கள் மனு கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியம், பேகேப்பள்ளி, நல்லுார், ஈச்சங்கூர், சேவகானப்பள்ளி, பாகலுார், பெலத்துார் உட்-பட மொத்தம், 12 பஞ்.,க்களுக்கு தனித்தனியாக சென்று, பொது-மக்களின் குறைகளை தி.மு.க.,- எம்.எல்.ஏ., பிரகாஷ் நேற்று கேட்டறிந்தார்.பேகேப்பள்ளி, நல்லுார் பகுதி மக்கள், தங்களது பஞ்.,த்தை, ஓசூர் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு வழங்கினர்.
அதேபோல், பாகலுாரை டவுன் பஞ்., ஆக தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ள நிலையில், அதனுடன் பெலத்துார் பஞ்., உட்பட்ட மேல் சூடாபுரம், கீழ் சூடாபுரம் கிராமங்கள் இணைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எம்.எல்.ஏ., பிரகாஷிடம் அப்பகுதி கிராம மக்கள் நேற்று மனு வழங்கினர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ., பிரகாஷ், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும், 4 ல், கருத்து கேட்பு கூட்டம் நடக்க உள்ளதால், அதில் பேசுகிறேன் என்றார். அதேபோல், சாக்-கடை கால்வாய், சாலை, குடிநீர், பெலத்துாரில் புதிய பஞ்., அலு-வலகம் கட்ட வேண்டும் என்பது போன்ற பல்வேறு மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.