/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'மோடி சித்து விளையாட்டு; மக்கள் ஏமாற மாட்டார்கள்'
/
'மோடி சித்து விளையாட்டு; மக்கள் ஏமாற மாட்டார்கள்'
ADDED : மார் 05, 2024 12:15 PM
கிருஷ்ணகிரி: பிரதமர் மோடியின் சித்து விளையாட்டுக்கு, தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி எம்.எல்.ஏ., கூறினார்.கிருஷ்ணகிரியில், அ.தி.மு.க., சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை புகழ்கிறார். அவர்களை தலைவர்களாக ஏற்றுக் கொண்ட, அ.தி.மு.க., தொண்டர்கள், பொதுமக்கள் மோடியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மோடியின் ஏமாற்றுகின்ற சித்து விளையாட்டுக்கு ஏமாற மாட்டார்கள்.
அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்குத்தான் மக்கள் ஆதரவளிப்பார்கள். அ.தி.மு.க., செய்யும் ஆர்ப்பாட்டம் தேவையில்லை என அவர் கூறியிருக்கிறார். காரணம், போதை பொருட்களின் ஊற்றுக்கண்ணாக குஜராத் உள்ளது. அங்கு ஆட்சியில் கடந்த, 25 ஆண்டாக, பா.ஜ., உள்ளது. அங்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான் நாடுகளிலிருந்து ஹெராயின், மெத்தனால், சரஸ் உள்ளிட்ட பல்வேறு போதைபொருட்கள் வருகிறது. அதை பதப்படுத்தும் யூனிட், சிறு தொழிற்சாலைகள் காளானாக அங்கு பரவி கிடக்கிறது. இதை மறந்துவிட்டு அண்ணாமலை பேசுகிறார்.
கண்ட்லா போர்ட், அதானி போர்ட் உள்ளிட்டவற்றில், 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பிடிபட்டுள்ளது. குஜராத், இமாச்சலில் போதை பொருட்களால் அதிகமானோர் பலியாவதாக சர்வே சொல்கிறது. முதலில், அவர்கள் முதுகில் இருக்கும் அழுக்கை துடைக்கட்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

