ADDED : நவ 10, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி லால் அருகே எம்.எம்., நகர் பின்புறம் உள்ள விஜய் நகரில் வசித்து வருபவர் சக்திகுமார், 40. டிரான்ஸ்போர்ட் தொழில் செய்கிறார்; இவரது மனைவி ரிச்சர்டு லீமா, 38. இருவரும் காதல் திருமணம் செய்து, வாழ்ந்து வந்தனர். இவர்களது, 9 வயது மகன் சர்வேஷ் சாகர், தனியார் பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வந்தார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக, நேற்று காலை, தன் மகனை படுக்கையறையில் தலையணையால் அழுத்தி கொலை செய்த ரிச்சர்டு லீமா, அதே அறையில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்தார். சிப்காட் போலீசார் சடலங்களை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

