/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் - பாகலுார் சாலையில் உயர்மட்ட மேம்பாலம் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
/
ஓசூர் - பாகலுார் சாலையில் உயர்மட்ட மேம்பாலம் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
ஓசூர் - பாகலுார் சாலையில் உயர்மட்ட மேம்பாலம் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
ஓசூர் - பாகலுார் சாலையில் உயர்மட்ட மேம்பாலம் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 06, 2025 01:10 AM
ஓசூர், ஓசூரில் உள்ள பாகலுார் சாலையில், உயர்மட்ட மேம்பாலம் அமைக்க, வாகன
ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் துவங்கி, பாகலுார் வழியாக, கர்நாடகா மாநிலம் மாலுாருக்கு நெடுஞ்சாலை செல்கிறது. மத்திய அரசு பராமரித்து வரும் இச்சாலையில், தினமும், 45,000 வாகனங்களுக்கு மேல் சென்று வருகின்றன. ஓசூரில் துவங்கி, கே.சி.சி., நகர் வரை, 2 கி.மீ., துாரத்திற்கு பாகலுார் சாலை மிகவும் மோசமாக இருப்பதால், மத்திய அரசிடம் இருந்து, 10.50 கோடி ரூபாய் நிதி பெற்று, புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணி, கடந்த 10 நாட்களுக்கு முன் துவங்கப்பட்டது. சாலையின் இருபுறமும் தலா இரு வாகனங்கள் சென்று வரும் படி, இச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இப்பகுதியில் சாலையோர கடைகளில் பார்க்கிங் வசதி இல்லை. அதனால், கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும் வாகன ஓட்டிகள், சாலையிலேயே தங்களது வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். அதனால் சாலை குறுகலாகி போக்குவரத்து பாதிக்கிறது.
புதிய சாலை அமைத்த பின்பும் கூட, போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் போகிறது. அதனால், ஓசூரில் துவங்கி, கே.சி.சி., நகர் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைத்து, மேலே கனரக வாகனங்களும், கீழே இலகுரக வாகனங்களும் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்பதே, வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், 30 டன் எடையுடன் வாகனங்கள் சென்றால் மட்டுமே, புதிதாக அமைக்கப்படும் தார்ச்சாலை தாக்கும்.
ஆனால், 60 டன் எடைக்கு மேலான வாகனங்கள், பாகலுார் சாலையில் சென்று வருகின்றன. புதிய சாலை அமைத்த பின்பும், இதுபோலத்தான் சென்று வரும். அதனால், அச்சாலை வேகமாக குண்டும், குழியுமாக மாறி, போக்குவரத்துக்கு லாயக்கற்றதாகி பாதிப்பு அதிகரிக்கும். எனவே, உயர்மட்ட பாலம் அமைக்கும் முடிவை, மத்திய, மாநில அரசுகள் எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.