/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றும் காங்., அ.தி.மு.க., முனுசாமி தாக்கு
/
பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றும் காங்., அ.தி.மு.க., முனுசாமி தாக்கு
பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றும் காங்., அ.தி.மு.க., முனுசாமி தாக்கு
பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றும் காங்., அ.தி.மு.க., முனுசாமி தாக்கு
ADDED : ஏப் 07, 2024 03:53 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயப்பிரகாஷை ஆதரித்து, கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி, மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி மற்றும் கட்சியினர், பேலகொண்டப்பள்ளி, கொத்தஜீகூர், கொமரனப்பள்ளி உட்பட மொத்தம், 45 இடங்களில், இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, பொதுமக்களிடம் நேற்று ஆதரவு திரட்டினர்.
அப்போது துணை பொதுச்செயலாளர் முனுசாமி பேசுகையில், ''ஏழை குடும்பத்திற்கு ஆண்டுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, காங்., தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. நாட்டில், 10 கோடி குடும்பங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளது என்றால், ஒரு குடும்பத்திற்கு, ஒரு லட்சம் ரூபாய் என்றால், ஆண்டுக்கு, 10 லட்சம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும். கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க., - காங்., கூட்டணி அமைத்து, தேர்தலை சந்தித்தன. அதில் ஏழை குடும்பத்திற்கு மாதம், 6,000 மற்றும் 100 நாள் வேலை திட்டத்தை, 150 நாளாக உயர்த்துவது; உயர்கல்வி மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி என, வாக்குறுதி அளித்து விட்டு நிறைவேற்ற முடியவில்லை. 2021ல் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. இப்போது தேர்தலில் புதிய வாக்குறுதியை அளிக்கிறார்கள். மத்திய அரசின் வருவாய், கடன் எத்தனை லட்சம் கோடி ரூபாய் என்பதை அறியாமல், இயற்கைக்கு முரணாக, மக்களை ஏமாற்றும் வாக்குறுதிகளை அளித்துள்ளனர்,'' என்றார்.
தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் முருகேஷ், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கணேஷ், மாவட்ட துணைச்செயலாளர் மதன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன், பொருளாளர் கந்தன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

