sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் குறைந்துள்ளன; எஸ்.பி., தகவல்

/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் குறைந்துள்ளன; எஸ்.பி., தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் குறைந்துள்ளன; எஸ்.பி., தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் குறைந்துள்ளன; எஸ்.பி., தகவல்


ADDED : ஜன 01, 2025 06:08 AM

Google News

ADDED : ஜன 01, 2025 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன' என, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2023ல், 59 கொலை வழக்கு பதிவாகியிருந்த நிலையில் கடந்தாண்டில், 56 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. ஒரு ஆதாய கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல கடந்த 2023ல், 3 கொள்ளை, 38 வழிப்பறி, சங்கிலி பறிப்பு வழக்கு பதிவாகியிருந்த நிலையில், 2024ல், ஒரு கொள்ளை, 30 வழிப்பறி, சங்கிலி பறிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட, 25 சதவீதம் குறைவாகும்.

திருட்டு சம்மந்தமாக 2024ல், 368 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 81 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில், 63 சதவீத வழக்கின் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த, 2023ல், 753 பேர் சாலை விபத்தால் இறந்த நிலையில், 2024ல், 683 ஆக இறப்பு குறைந்துள்ளது. கடந்தாண்டில் சாலை விதிகளை மீறிய, 1.29 லட்சம் பேர் மீது வழக்கு பதிந்து, 3 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக மது விற்பனை மற்றும் கடத்தல் சம்மந்தமாக 5,687 வழக்குகள் பதிந்து, 5,738 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1.95 கோடி ரூபாய் மதிப்பிலான 17,700 லிட்டர் மதுபானங்கள், 70 டூவீலர்கள், 15 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் கடத்தல், விற்பது தொடர்பாக, 1,173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,213 பேர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடமிருந்து, 1.07 கோடி ரூபாய் மதிப்பிலான, 14,800 கிலோ குட்கா, 14 டூவீலர்கள், 38 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல லாட்டரி விற்பனை தொடர்பாக, 338 வழக்குகளில், 393 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணையவழி குற்றம் சம்மந்தமாக, 136 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் இணையவழியாக இழந்த, 30.93 கோடி ரூபாய் முடக்கம் செய்யப்பட்டு, 2.44 கோடி ரூபாய் மீட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சம்மந்தமாக, 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 132 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் கொலை, கொள்ளை, மது கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில், 40 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்கள் நடப்பது குறித்து தெரிந்தால், 94981 81214 என்ற மொபைல் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us