/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
48 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்
/
48 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்
48 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்
48 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்
ADDED : செப் 07, 2025 12:51 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஆலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த, 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாமை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் பார்வையிட்டு, 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கி பேசியதாவது:
இங்கு நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில், 2,128 பேர் பதிவு செய்து சிகிச்சை பெற்றனர். மேலும், மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. உயர் சிகிச்சை தேவைப்படுவோர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தில், மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படுவர்.
எனவே, பொதுமக்கள் மருத்துவ முகாமில் பங்கேற்று, தேவையான சிசிக்சைகளை பெற்றுக் கொள்ளலாம் மாவட்டத்தில் இதுவரை 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாமில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 48 பேருக்கு தேசிய அடையாள அட்டை, 20 பேருக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறைகளிலும் நடந்து வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பேசினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.