/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேர்தலை புறக்கணிப்பதாக மலை கிராம மக்கள் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை
/
தேர்தலை புறக்கணிப்பதாக மலை கிராம மக்கள் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை
தேர்தலை புறக்கணிப்பதாக மலை கிராம மக்கள் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை
தேர்தலை புறக்கணிப்பதாக மலை கிராம மக்கள் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை
ADDED : மார் 19, 2024 07:38 AM
ஓசூர் : தேன்கனிக்கோட்டை அருகே, தேர்தலை புறக்கணிக்க, மலை கிராம மக்கள் தயாரான நிலையில், தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த பெட்டமுகிலாளம் பஞ்.,க்கு உட்பட்ட மலை கிராமங்களில், கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் கிணறுகள் வறண்டு வருகின்றன. எனவே, கிணறுகளை துார்வார வேண்டும். அத்துடன், புதிய போர்வெல்கள் போட, வனத்துறை அனுமதி வழங்க வேண்டும் என, கிராம மக்கள் பல மாதமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், பெட்டமுகிலாளம் மலை கிராமம் என்பதால், அப்பகுதியில் கிணறுகளை துார்வாரவும், புதிய போர்வெல் அமைக்கவும் பல்வேறு நிபந்தனைகள் உள்ளன.
அதற்கான அனுமதியை வனத்துறை பெற்று கொடுக்க எந்த முயற்சியும் செய்யாததால், லோக்சபா தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி, பெட்டமுகிலாளம் கிராம மக்கள் நேற்று துண்டு பிரசுரங்களை வினியோகிக்க துவங்கினர்.
இதையறிந்த தேன்கனிக்கோட்டை தாசில்தார் பரிமேலழகர் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள், தாலுகா அலுவலகத்திற்கு, மலை கிராம மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கிணறுகளை துார்வாரவும், புதிய போர்வெல் அமைக்கவும், மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக, தாசில்தார் பரிமேலழகர் வாக்குறுதி கொடுத்தார். அதையேற்று, தேர்தல் புறக்கணிப்பை, மக்கள் வாபஸ் பெற்றனர்.

