/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நிறுத்தி வைப்பால் பேச்சுவார்த்தை
/
சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நிறுத்தி வைப்பால் பேச்சுவார்த்தை
சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நிறுத்தி வைப்பால் பேச்சுவார்த்தை
சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நிறுத்தி வைப்பால் பேச்சுவார்த்தை
ADDED : செப் 22, 2024 05:22 AM
ஓசூர்: ஓசூரிலுள்ள, தளி சாலை யை விரிவாக்கம் செய்யும் பணியை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டுள்ளது. இச்சாலையிலுள்ள டி.வி.எஸ்., நகரில், நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையோரம் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், குறிப்பிட்ட பகுதியில் அமைக்கப்படும் சாக்கடை கால்வாய், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள எல்லம்மா கோவில் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி, ஒரு தரப்பினர் கால்வாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர் கால்வாய் அமைக்க வேண்டும் என கேட்டு வருகின்றனர்.
இதனால், நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொண்டு பணிகளை செய்ய முடியாமல், கால்வாய் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தகலறிந்த ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், சம்பவ இடத்திற்கு நேற்று காலை சென்று பார்வையிட்டு, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், சட்ட திட்டத்திற்கு உட்பட்டு கால்வாய் பணியை மேற்கொள்ள, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை எம்.எல்.ஏ., அறிவுறுத்தினார்.
புகையிலை பொருட்கள்
விற்ற 9 பேர் கைது
கிருஷ்ணகிரி-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனை நடக்கிறதா என அந்தந்த பகுதி போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
ஓசூர் பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிவரை நிறுத்தி, அவரது பையை சோதனையிட்டதில், 3.75 கிலோ புகையிலை பொருட்களை கடத்திச் செல்ல முயன்றது தெரிந்தது. இதையடுத்து வேலுார் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த ஹனிபா, 38, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி, ஓசூர் சிப்காட், மத்திகிரி, பேரிகை, ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி கெலமங்கலம் உள்ளிட்ட பகுதி பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற, மேலும், 8 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து, 9,050 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.