/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கடன் கொடுக்க முடியாது என்றதால் இருவரை தாக்கிய 3 பேருக்கு வலை
/
கடன் கொடுக்க முடியாது என்றதால் இருவரை தாக்கிய 3 பேருக்கு வலை
கடன் கொடுக்க முடியாது என்றதால் இருவரை தாக்கிய 3 பேருக்கு வலை
கடன் கொடுக்க முடியாது என்றதால் இருவரை தாக்கிய 3 பேருக்கு வலை
ADDED : ஆக 21, 2024 06:16 AM
கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அடுத்த எட்டிப்பள்ளியை சேர்ந்தவர் சவுந்தர்யா, 26; மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த, 18 இரவு அதே பகுதியை சேர்ந்த நாகராஜ், 36 என்பவர், மளிகை சாமான்கள் கடன் கேட்டுள்ளார். அதற்கு சவுந்தர்யா பழைய பாக்கி நிறைய இருப்பதாகவும், கடன் தர முடியாது எனவும் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், அவரது அண்ணன் கிருஷ்ணன், 37, அவர் மனைவி புனிதா, 31 ஆகியோர் சவுந்தர்யாவையும் அவரது கணவர் பழனிவேலையும் இரும்பு ராடால் அடித்துள்ளனர். படுகாயமடைந்த சவுந்தர்யா, பழனிவேல் இருவரும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சவுந்தர்யா புகார் படி, அவர்களை தாக்கிய மூவரையும் வேப்பனஹள்ளி போலீசார் தேடி வருகின்றனர்.