/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு
/
புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு
ADDED : ஆக 14, 2025 01:51 AM
பென்னாகரம், பென்னாகரத்தை அடுத்த செங்கனுார் ஊராட்சிக்கு உட்பட்ட, சின்னப்பளத்துார், பெரியப்பளத்துார், செங்கனுார் கிராமங்களில், புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு பணி நடந்தது.
புதிய பாரத எழுத்தறிவு திட்டமானது, 15 வயதுக்கு மேற்பட்ட கல்லாதவர்களுக்கு அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவு கற்பிக்க தன்னார்வலர்களை கொண்டு, நடத்தப்படும் திட்டம்.
இதில் கல்லாதவர்களை அடையாளம் காண, செங்கனுார் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னபள்ளத்துார், பெரியப்பள்ளத்துார், செங்கனுார் ஆகிய குடியிருப்புகளில் கல்லாதவர் கணக்கெடுப்பானது தலைமையாசிரியர் பழனி தலைமையில் நடந்தது.
ஆசிரியர் பயிற்றுனர் இளங்கோவன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி, சத்துணவு பணியாளர், தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.
இப்பகுதிகளில் கல்லாதவர்கள் இனம் காணப்பட்டு தன்னார்வலர்கள் கொண்டு புதிய பாரத எழுத்தறிவு திட்டமானது, தன்னார்வலர்கள் மூலம் தொடங்கப்பட்டது.

