/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தர்மபுரி புதிய கலெக்டர் பொறுப்பேற்பு
/
தர்மபுரி புதிய கலெக்டர் பொறுப்பேற்பு
ADDED : பிப் 04, 2025 05:44 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டராக பணிபுரிந்த சாந்தி, சேலம் பட்டு வளர்ச்சித்துறை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக, ஈரோடு மாவட்ட கூடுதல் கலெக்டராக இருந்த சதீஷ், தர்மபுரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து, தர்மபுரி மாவட்டத்தின், 46வது கலெக்டராக சதீஷ், நேற்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். நிருபர்களிடம் அவர் கூறுகையில்,''போதையில்லா தமிழகம் நடைமுறை படுத்தப்படும். பெண்கள் மற்றும்
குழந்தைகளுக்கு அரசு வழங்கும் திட்டங்களை கொண்டு சேர்த்து, அவர்களை முன்னேற்றுவது மற்றும்
அடித்தட்டு மக்களுக்கு அரசின் நலத்திட்-டங்களை கொண்டு சேர்ப்பது என, 2 திட்டங்களை என்னுடைய
நோக்கமாக கொண்டுள்ளேன். தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடு படுவேன்,'' என்றார்.தர்மபுரி மாவட்டத்தில், 2018ல் கலெக்டர் விவேகானந்தனுக்கு பின், தொடர்ச்சியாக மலர்வழி, கார்த்திகா,
திவ்யதர்ஷினி, சாந்தி என, 4 பெண் கலெக்டர்கள் பணிபுரிந்தனர் என்பது குறிப்பிடத்-தக்கது.