sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : பிப் 18, 2024 10:12 AM

Google News

ADDED : பிப் 18, 2024 10:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாணவர்களுக்கு போட்டி

பாலக்கோடு அடுத்த நெல்லுக்குந்தி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சென்னிவீரப்பா தலைமை வகித்தார். இதில், பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள், ஓவியம், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மணிபாலன், ஆசிரியர்கள் காமராஜ், அன்புமணி, பியாரேஜான் நதியா மற்றும் ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.

ரூ.10 லட்சம் மதிப்பில்பேவர் பிளாக் சாலை

காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டஹள்ளி பஞ்., கபரஸ்தானில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தொகுதி மேம்பாட்டு நிதியில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன்., எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். காவேரிப்பட்டணம், தி.மு.க., நகர செயலாளர் பாபு தலைமை வகித்தார். அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள், தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பகுதிநேரரேஷன் கடை திறப்பு

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த சிவாடி ரேஷன் கடைக்கு உட்பட்ட பொதுமக்கள், கந்துகால்பட்டியில் பகுதிநேர ரேஷன் கடை திறந்து வைக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, தர்மபுரி கலெக்டர் சாந்தி நேற்று, கந்துகால்பட்டிக்கு, 157 ரேஷன் கார்டுகளை பிரித்து புதிய பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்தார். இதன் மூலம், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொத்த ரேஷன் கடைகள் எண்ணிக்கை, 1,087 ஆக உயர்ந்துள்ளது.

பகுதிநேர ரேசன் கடை திறப்பு விழாவில், தர்மபுரி தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார், தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் (பொ) மலர்விழி உட்பட, பலர் பங்கேற்றனர்.

இயல், இசை, நாடக கலைகுழுவினருக்கு கேடயம்

கிருஷ்ணகிரி நகராட்சி, பழையபேட்டை, விநாயகா மஹாலில், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில், கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி கலைநிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு நிகழ்ச்சியை துவக்கி வைத்து, கோலாட்டம், ஆதிதோல் பறை இசை, பேண்டு இசை, பம்பையாட்டம், கைச்சிலம்பாட்டம், தெருக்கூத்து நிகழ்ச்சி கலைகுழுவினருக்கு கேடயங்களை வழங்கினார்.

தாசில்தார்கள் மிருளாளனி, சுப்பிரமணி, விழா ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி, மற்றும் கலைக்குழுவினர் கலந்து கொண்டனர்.

வாலிபரை அரிவாளால் வெட்டியவர் கைது

கிருஷ்ணகிரி, பழையபேட்டை குப்பைமேடு தெருவை சேர்ந்தவர் வினித்குமார், 23; அதே பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித், 27; கடந்த, 11ல், வினித்குமார் தன் நண்பர் சார்லசுடன் குப்பைமேடு தெருவில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு வந்த ரஞ்சித்துடன் அவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் முன்விரோதம் இருந்த நிலையில் கடந்த, 15 இரவு, 9:00 மணியளவில் வீட்டருகே சென்ற வினித்குமாரை ரஞ்சித் மற்றும் அவரது நண்பர் ரஞ்சன், 21, ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர். ரஞ்சித், அரிவாளால் வினித்குமாரை வெட்டியுள்ளார். படுகாயமடைந்த அவர், புகார் படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்கில் ரஞ்சித்தை கைது செய்தனர்.

பழ தோட்டத்திற்கு தீவைப்பு

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பி.பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் ஜான். இவர் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் பள்ளிப்பட்டியில் கார்மேல் பள்ளி அருகிலும், பாப்பிரெட்டிப்பட்டி -பொம்மிடி ரோட்டில் பி.பள்ளிப்பட்டி மாதா கோவில் மலை பகுதியிலும் உள்ளது. இதில் நெல்லி, எலுமிச்சை உள்ளிட்ட பழ மரங்கள் வைத்து தோட்டத்தை பராமரித்து வருகிறார். இந்த தோட்டத்திற்கு மர்ம நபர்கள் நேற்று முன்தினம் தீ வைத்தனர். தீ மள மளவென பரவி நெல்லி மரங்கள் எரிந்தது. பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். இதில் நெல்லிக்காய் மரங்கள் எரிந்து சாம்பலானது. புகார் படி, பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.

வாக்களிக்க செயல்முறை விளக்கம்

கல்லுாரியில் விழிப்புணர்வு முகாம்

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, புதிய வாக்காளர்களாக வாக்களிப்போருக்கு, தேர்தல் ஆணைய உத்தரவுபடி, கல்லுாரி முதல்வர் (பொ) ரவி தலைமையில் இ.வி.எம்., வி.வி.பேட்., முறையில் வாக்களிப்பது எப்படி, என்பது குறித்து பயிற்சி, விழிப்புணர்வு முகாம் நடந்தது. வாக்களிப்பது குறித்த செயல்விளக்கம், வாக்களித்தலின்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி, தேர்தல் பிரிவு, ஆர்.ஐ.,க்கள் திவ்வீஸ்வர், சதீஷ்குமார் ஆகியோர் விளக்கினர். நிகழ்ச்சியில் தேர்தல் பிரிவு அலுவலர் பேராசிரியர் அருண் நேரு, வி.ஏ.ஓ., சதாசிவம், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

கற்கள் கடத்திய லாரி பறிமுதல்கிருஷ்ணகிரி சிறப்பு துணை தாசில்தார் கோகுலகண்ணன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு பூதிமுட்லு பகுதியில் ரோந்து சென்றுள்ளனர். அப்பகுதியில் வேப்பனஹள்ளி - தீர்த்தம் சாலையில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனையிட்டதில், பெரிய அளவிலான, 5 ராட்சத கிரானைட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. அவர் புகார் படி வேப்பனஹள்ளி போலீசார், லாரியை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.

அரசு பள்ளிகளில் ஆண்டு விழா

தேன்கனிக்கோட்டை அருகே, நெல்லுகுந்தி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகிலா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மணிபாலன் தலைமை வகித்தனர். தலைமையாசிரியர் சென்னீவிரப்பா முன்னிலை வகித்தார். மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணப்பா, வார்டு உறுப்பினர் நாகராஜ், ஆசிரியர்கள் காமராஜ், அன்புமணி, பியாரேஜான், நதியா உட்பட பலர் பங்கேற்றனர்.

ஓசூர் அருகே மோரனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவி ரோஜா ஹரிஸ் தலைமை வகித்தார். பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. வார்டு உறுப்பினர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

மகளிர் காங்., விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

தமிழக மகிளா, காங்., சார்பில், தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவி காளியம்மாள் தலைமை வகித்தார். சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி முன்னிலை வகித்தார். இதில், வருமான வரித்துறையை ஏவிவிட்டு, காங்., கட்சியை முடக்க நினைக்கும், பா.ஜ., அரசை கன்டிகிறோம். வட மாநிலங்களில் பெண்களை தரக்குறைவாக நடத்தி, அவர்களை படுகொலை செய்வதை, மத்திய அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகளை, தைரியமாக வெளியே கொண்டு வரவேண்டும்.

குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் நடக்கும், பா.ஜ., ஆட்சியில், இதுபோல் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ரேவதி, தி.மு.க., மாவட்ட மகளிரணி தலைவி முத்துலட்சுமி, தமிழக, காங்., கமிட்டி மாநில துணைத்தலைவர் தீர்த்தராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.

'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்'

தர்மபுரியில் தி.மு.க., பொதுக்கூட்டம்

தர்மபுரி லோக்சபா தொகுதி, தி.மு.க., சார்பில், 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' பொதுக்கூட்டம் தொடர்பாக, மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்ரமணி, பழனியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில், 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, அ.தி.மு.க., அரசின், 10 கால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள், துன்பங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவும், வரும், 2024 லோக்சபா தேர்தலில் கடந்த, 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு, பா.ஜ., அரசு இழைத்த அநீதிகள், மத்திய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து, தற்போது நாடகமாடும் அடிமை, அ.தி.மு.க.,வின் துரோகங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், என்ற வகையில், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை படி, தர்மபுரி லோக்சபா தொகுதி, தி.மு.க., சார்பில், 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' பொதுக்கூட்டம், இன்று (பிப்.18) மாலை, 5:00 மணிக்கு தர்மபுரி வள்ளலார் திடலில் நடக்கவுள்ளது.

இதில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் ‍பேச உள்ளார். அதுசமயம் இந்நாள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ., மாநில, மாவட்ட, ஒன்றிய, அணிகள், பிரிவு என அனைத்து நிலை பொறுப்பாளர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

800 பக்தர்கள் அயோத்தி பயணம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., சார்பில், ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தொகுதியை சேர்ந்த, 2,600 பக்தர்கள், 3 கட்டங்களாக அயோத்தி ராமர் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 4ம் கட்டமாக, 800 பக்தர்களை ரயில் மூலம் அயோத்திக்கு வழியனுப்பும் விழா, ஓசூர் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று மாலை நடந்தது. மாவட்ட பொருளாளர் சீனிவாசன், செயலாளர் பிரவீன்குமார், மாநில தொழில் பிரிவு செயலாளர் ராமலிங்கம், மாநில பட்டியல் அணி துணைத்தலைவர் கஸ்துாரி, மாவட்ட துணைத்தலைவர் முருகன் மற்றும் நிர்வாகிகள், பக்தர்களை வழியனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us