ADDED : நவ 09, 2026 01:04 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் லேசானது முதல் கனமழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வந்தன.
நேற்று தீபாவளி பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி நகரின் சாலையோரம், நோன்பு கயிறு, பானை, முறம், பூக்கள் என கேதாரி கவுரி விரதத்திற்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வந்தனர். கடந்த, 3 நாட்களாக மாவட்டத்தில் மழையின்றி விற்பனை பாதிக்காததால், சிறு வியாபாரிகள் மற்றும் சாலையோர கடைக்காரர்கள் நிம்மதி அடைந்தனர். இதே போல், கடந்த, 4 ஆண்டுகளாக தீபாவளியன்று மழை பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
