/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாரியம்மன் கோவிலில் காணிக்கை திருட்டு
/
மாரியம்மன் கோவிலில் காணிக்கை திருட்டு
ADDED : ஆக 03, 2025 12:53 AM
சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே மருதாண்டப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட வரதாபுரம் கிராமத்தில், மாரியம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதம் என்பதால், தினமும் காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பூஜை செய்து விட்டு, பூசாரிகள் முனிகிருஷ்ணன், வெங்கட்ராஜ் ஆகியோர் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். நேற்று காலை பூஜை செய்ய சென்ற போது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது, 2 லட்சம் ரூபாய் காணிக்கையுடன் இருந்த கோவில் உண்டியல் மற்றும் அம்மன் கழுத்தில் கிடந்த, 6 கிராம் தங்க தாலி, அரை கிலோ வெள்ளி கிரீடம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்து, சூளகிரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் நேரில் விசாரித்த போது, கோவிலின் பின்புறம், 100 மீட்டர் துாரத்தில் உடைக்கப்பட்ட உண்டியல் கிடப்பது தெரியவந்தது. அதை மீட்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வீடு தேடி ரேஷன் பொருள் மாவட்ட கலெக்டர் ஆய்வு
ஓசூர், ஆக. 3
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தாயுமானவர் திட்டத்தில், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்
திறனாளிகள் வீடுகளுக்கு நேரில் சென்று, ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் முதற்கட்ட சோதனையாக, ஓசூர் மாநகராட்சியில், 75 ரேஷன் கார்டுதாரர்
களுக்கும், பர்கூர் தாலுகாவில், 68, அஞ்செட்டி தாலுகாவில், 51 ரேஷன் கார்டுதாரர்களுக்கும் என மொத்தம், 194 அட்டைதாரர்களுக்கு வீட்டிற்கே சென்று உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. ஓசூர் மாநகராட்சி பஸ்தி சாமுண்டி நகர் பகுதியில், வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்குவதை, மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நடராஜன், பொது வினியோக திட்ட துணை பதிவாளர் பெரிய
சாமி, ஓசூர் தாசில்தார் குணசிவா ஆகியோர்
உடனிருந்தனர்.