ADDED : ஆக 03, 2025 12:53 AM
ஊத்தங்கரை, ஊத்தங்கரை வட்டார வேளாண் உதவி இயக்குனர் (பொ) பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: குறுகிய காலத்தில் குறைந்த அளவு நீரை கொண்டு, நிறைவான மகசூலுடன் கணிசமான லாபமும் ஈட்ட மக்காச்சோளம் உகந்த பயிராகும். தமிழக அரசின் வேளாண்துறை மூலம், மக்காச்சோளம் செயல்விளக்கதிடல் அமைக்கும் விவசாயிகளுக்கு, வீரிய ஒட்டு ரக மக்காச்சோள விதைகள், உயிர் உரங்கள், மண்வளம் மேம்பாட்டுக்கான இயற்கை இடுபொருட்கள், நானோ யூரியா ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட உள்ளன.
ஊத்தங்கரை வட்டார வேளாண் விரிவாக்க மைய கிடங்குகளில், பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு, 55 ஹெக்டருக்கும், ஆதிதிராவிடர் பிரிவு விவசாயிகளுக்கு, 25 ஹெக்டருக்கும், பழங்குடி பிரிவு விவசாயிகளுக்கு, 20 ஹெக்டருக்கும் தேவையான இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயி
கள், உழவன் செயலியில் முன்பதிவு செய்ய வேண்டும். விவசாயிகள் தங்களது நில உடைமை சான்று சிட்டா, ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து, மானிய விலையில் இடுபொருட்களை பெற்று கொள்ளலாம்.