/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நெற்பயிருக்கு பின் பயறு வகை சாகுபடி விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி
/
நெற்பயிருக்கு பின் பயறு வகை சாகுபடி விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி
நெற்பயிருக்கு பின் பயறு வகை சாகுபடி விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி
நெற்பயிருக்கு பின் பயறு வகை சாகுபடி விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி
ADDED : ஜன 18, 2024 10:35 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா காமன்தொட்டி கிராமத்தில், நெற்பயிருக்கு பின் பயறு வகைகள் சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது.
வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஜான்லுார்து சேவியர் தலைமை வகித்தார்.
வேளாண் துணை இயக்குனர் சீனிவாசன், அத்திமுகம் அதியமான் வேளாண்
கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மைய முதல்வர் ஸ்ரீதரன், பட்டு வளர்ச்சித்துறை கல்யாணசுந்தரம், கால்நடை பராமரிப்புத்துறை வடிவழகன், தோட்டக்கலைத்துறை திருவேங்கடம், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை சுந்தர், உதவி வேளாண் அலுவலர் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.
பயிற்சியில், நெற்பயிருக்கு பின் பயறு வகைகளை எவ்வாறு சாகுபடி செய்வது, அதற்கான விதை, பூச்சி மருந்து, பண்ணை கருவிகள், தார்பாலின், பேட்டரி தெளிப்பான், ஜிப்சம், ஜிங்க்சல்பேட் மற்றும் தானியங்கள் மானிய விலையில் பெறுவது, உழவன் செயலியின் பயன்கள், உழவன் செயலியை பதிவிறக்கம் செய்வது, உயிர் உரங்கள் மற்றும் நுண்ணுாட்ட உரங்களின் பயன்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், பாரம்பரிய நெல் ரகங்கள், சிறு தானியங்கள் கண்காட்சியும் நடந்தது. இதில், 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.