/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முன்னாள் சென்ற வாகனத்தின் மீது கார் மோதி ஒருவர் பலி;4 பேர் காயம்
/
முன்னாள் சென்ற வாகனத்தின் மீது கார் மோதி ஒருவர் பலி;4 பேர் காயம்
முன்னாள் சென்ற வாகனத்தின் மீது கார் மோதி ஒருவர் பலி;4 பேர் காயம்
முன்னாள் சென்ற வாகனத்தின் மீது கார் மோதி ஒருவர் பலி;4 பேர் காயம்
ADDED : மே 19, 2024 02:55 AM
கிருஷ்ணகிரி: சென்னை அம்பத்துாரை சேர்ந்தவர் குப்புராஜ், 60, தனியார் நிறுவன மேலாளர். இவர் கடந்த, 17ல், அதே பகுதியை சேர்ந்த தன் நண்பர்கள் ரகுநாதன், 55, ராஜ்குமார், 53, அவரது, 14வயது மகன், மிலன்குமார், 32 ஆகியோருடன் மாருதி ஸ்விப்ட் காரில் ஓசூர் நோக்கி சென்றுள்ளனர்.
காரை, ராஜ்குமார் ஓட்டியுள்ளார். காலை, 10:00 மணியளவில் பேரண்டப்பள்ளி அருகே கிருஷ்ணகிரி- - ஓசூர் சாலையில் சென்ற போது, முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ரகுநாதன் இறந்தார். மற்ற நால்வரும் படுகாயமடைந்த நிலையில், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.