sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

/

பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

பகுதி நேர ரேஷன் கடை திறப்பு


ADDED : நவ 13, 2025 02:59 AM

Google News

ADDED : நவ 13, 2025 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெலமங்கலம்: கெலமங்கலம் ஒன்றியத்தில், 5 கி.மீ., துாரம் ரேஷன் பொருட்கள் வாங்க, மக்கள் சென்று வந்த நிலையில்,

அதே கிராமத்தில் பகுதி-நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், மேட அக்ர-ஹாரம் பஞ்., உட்பட்ட கல்கான்கொட்டாய் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதிக்கு தனியாக ரேஷன் கடை இல்லாததால், 5 கி.மீ., தொலைவிலுள்ள பால்னாம்பட்டி கிராமத்திற்கு ரேஷன் பொருட்களை வாங்க, மக்கள் சென்று வந்தனர். இதனால் காலநேரம் விரயமாகி வந்தது. ரேஷன் பொருட்கள் வழங்கும்போது, கூலி வேலைக்கு செல்-லாமல் விடுமுறை எடுக்க வேண்டிய நிலை இருந்தது. இதைய-டுத்து, கல்கான்கொட்டாய் கிராமத்தில் புதிதாக பகுதிநேர ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது.

இதை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் நேற்று திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், தி.மு.க., இளைஞரணி மாநில துணைச்செ-யலாளர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், ஒன்-றிய செயலாளர் சின்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us