ADDED : மே 02, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:ஓசூரில், மாவட்ட வண்ணம் பூசுவோர் முன்னேற்ற நலச்சங்க மூன்றாமாண்டு விழா நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மணி தலைமை வகித்தார். செயலாளர் மஞ்சுநாத் வரவேற்றார். பொருளாளர் ரமேஷ், துணைத்தலைவர் மணி, துணை செயலாளர் வில்சன்ராஜ் முன்னிலை வகித்தனர்.
ஓசூர், தி.மு.க.,-எம்.எல்.ஏ., பிர காஷ், சங்க கொடியை ஏற்றினார். மே தினத்தையொட்டி தொழிலாளர்களுக்கு பதக்கம், பொன்னாடை அணிவிக்கப்பட்டது. நலிவடைந்த தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. ஓசூர் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், முன்னாள் கவுன்சிலர் முரளி உட்பட பலர் பங்கேற்றனர்.