/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் முறையாக அமைக்காத சாக்கடை கால்வாயால் மக்கள் அவதி
/
கிருஷ்ணகிரியில் முறையாக அமைக்காத சாக்கடை கால்வாயால் மக்கள் அவதி
கிருஷ்ணகிரியில் முறையாக அமைக்காத சாக்கடை கால்வாயால் மக்கள் அவதி
கிருஷ்ணகிரியில் முறையாக அமைக்காத சாக்கடை கால்வாயால் மக்கள் அவதி
ADDED : மே 29, 2025 01:15 AM
கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி நகராட்சியில் கடந்த, 4 ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யாததால், கால்வாயில் மண்ணும், சகதியும் நிரம்பி உள்ளது. நகராட்சி ஊழியர்கள் பழையபேட்டை மீன் சந்தை அருகே ஆங்காங்கே சாக்கடை கால்வாயை துார்வாரி வருகின்றனர். இதனால், பல இடங்களில் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இங்குள்ள போலீஸ் பூத் அருகே சாலையின் நடுவில் கால்வாயை முறையாக அமைக்காததால், நகராட்சி துவக்கப்பள்ளியில் இருந்து நேதாஜி சாலை வரை, 10 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுநீர் தேங்கியுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மீன் சந்தை அருகே சாலை குறுகே நகராட்சி நிர்வாகம் முறையான திட்டமிடுதலுடன் கால்வாயை அமைக்காததால், கழிவுநீர் வெளியே செல்லாமல் ஆண்டு கணக்கில் தேங்கியுள்ளது. இதுவரை, 2 கலெக்டர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து இக்கால்வாயை கழிவுநீர் வெளியேறும் வகையில் மாற்றி அமைக்க, நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டும், யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் வீடு களுக்குள் புகுந்து விடுகிறது. இதே போன்று, நகரின் பல பகுதிகளில், சாக்கடைக்கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கியும், சாலையில் ஓடியும் வருகிறது' என்றனர்.