/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீராணம் அருகே காத்திருக்கும் 'கள்ளக்குறிச்சி' விபரீதம் 24 மணி நேரமும் சாராயம் விற்பதாக மக்கள் புகார்

ADDED : ஜன 14, 2025 02:07 AM
சேலம்: கள்ளச்சாராயம் மற்றும் சந்துக்கடை வைத்து மது விற்பதாக, தி.மு.க., நிர்வாகி மீது, ஊர் மக்கள் சார்பில், கலெக்டர் அலுவல-கத்தில் மனு அளித்தனர்.
சேலம் மாவட்டம் வீராணம் அருகே சுக்கம்பட்டியை சேர்ந்த ஊர் கவுண்டர் பழனிசாமி, 71, தலைமையில், 50க்கும் மேற்பட்ட மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். இது-குறித்து பழனிசாமி கூறியதாவது:
வீராணம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக, தி.மு.க., நிர்வாகி முருகன் உள்ளார். இவர் சுக்-கம்பட்டி பகுதியில் நான்கு இடங்களில் சந்துக்கடை மூலம் மது, கள்ளச்சாராயத்தை, 24 மணி
நேரமும் விற்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டால், 'போலீஸ் முதல் அரசியல் வரை செல்-வாக்கு படைத்தவன்; என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடி-யாது' என்று கூறி, மிரட்டல் விடுக்கிறார். பெண்கள் அந்த வழி-யாக
செல்ல முடியாமல், நீண்ட துாரம் நடந்து சென்று மாற்றி-டத்தில் பஸ் ஏறி செல்கின்றனர். தற்போதைய நிலையே தொடர்ந்தால், கள்ளக்குறிச்சியில் கள்ளச்-சாராயம் குடித்து, 70 பேர் இறந்தது போல், வீராணத்திலும் விப-ரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வீராணம் போலீசில் முருகன் மீது புகாரளித்தும் பலனில்லாத
நிலையில், மாவட்ட நிர்வாகத்தில் புகார் தெரிவித்துள்ளோம். இதன் பிறகும் நடவடிக்கை எடுக்கா-விட்டால், மக்கள் ஒன்று சேர்ந்து, உண்ணாவிரதம், மறியலில் ஈடு-படவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து முருகனிடம் கேட்டபோது, ''அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சியில் என் மீது புகார் தந்துள்ளனர்,'' என்றார்.